அந்த ஒரு நொடிப்பொழுதில்
ஒரு பெரும் துயரம்
ஓ .............
அன்னை மடிஎனத் தவழ்ந்த அலைகடல்
தன பெரு வயிறு பிளந்து
எங்கள்
கடுவரையை கவர்ந்தது
வலை விரித்து
வாரிச் செல்வோம் மீனை -நீ
அலை விரித்து
அவகரித்தாய்
எம் வாழ்வினை
பழி சுமந்த பரம்பறையாய்
நாங்கள் இங்கே .............
பார்த்திருக்க பாலருடன்
பலரை இங்கு பறி கொடுத்தோம்
விதி எழுதி வைத்ததுவோ !
விடை அறியா புதிர் இதுவோ !!
படை நகர்த்தி கொலை புரிந்த
களம் எனவே கரைகள் எல்லாம் ............
அந்த ஒரு நொடிப் பொழுதில்
ஒரு பெரும் துயரம்! ஓ ................
சுனாமிஜின் நினைவால் ...................!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக