வியாழன், 9 பிப்ரவரி, 2012

புதுமைப் பெண் !!




போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
... செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்

வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே!

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.
சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!!!

------------ பாரதி !!!!!!!

நினைவுகளுடன்...!

பருக நீரின்றி உடல்
வற்றி கிடந்தாலும்
கண்கள் மட்டும்
கண்ணீர் சிந்தமறுப்பதில்லை...!!
உன் நினைவுகள்
என் நெஞ்சில்
இருக்கும் போது
நிரந்தர பிரிவுகள்
என்றும் இல்லை...
என்றென்றும்
உன் நினைவுகளுடன்...!

உயிருள்ள தாஜ்மஹால்

 
என் ஆயுள் உள்ளவரை
உன் காதல் வேண்டும்......
இல்லையேல்....
உன் காதல் உள்ளவரை
என் ஆயுள் போதும்.........
 
உண்மையான
காதலை
இழந்த‌
பின்பும்
அதை
...
...மறக்காமல்
வாழும்
அனைவருமே
ஒரு
.
.
.
.
"உயிருள்ள தாஜ்மஹால் தான்

நட்பு உயர்வானது !!!

உன் நட்பை நேசித்து நான் கவிதை எழுதுகிறேன் .....!
ஆனால் என் கவிதை கூட என்னை நேசிக்காமல்
 உன் நட்பையே நேசிக்கிறது என்னை போலவே .....!
உன்னதமாய் செய்யப்படும் காதலை விட

உலகமே வழிபடும் இறைவனை விட

உடலை இயக்கும் உயிரை விட

உயிர் நண்பனின் நட்பு உயர்வானது  !!!


♥♥ அழகா ♥♥



♥♥கண்ணழகா..காலழகா
பொன் அழகா ..பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா?
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம்அழகா?
உயிரே உயிரே உனைவிட எதுவும்
... உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி♥♥


நினைக்க யோசிக்கிறாய்

 
நீ என்னை நினைக்க யோசிக்கிறாய்
ஆனால்
நான் உன்னை நினைப்பதற்காகவே
சுவாசிக்கிறேன்
 
தூரத்தில்

நான்
வரும்பொழுது..!

...
என்னை
கண்டும் காணாமல்
நடிப்பாயே

இன்னும்...

நெஞ்சில் நிற்கின்றன
அந்த நினைவுகள்....

அழியாமல்...

அம்மாவை



அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
...
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை

கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!

அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!

சகித்துக்கொண்டும்


எப்போதும்
என்ன பேசினாலும்
கேட்டுவிட்டு
சிரித்து கொண்டே
இருப்பதன்
... அர்த்தம்
சந்தோஷப்படுகிறார்கள்
என்றுதான் இல்லை.

சகித்துக்கொண்டும்
இருந்திருக்கலாம்.
See More

கண்ணிர் துளி.

வலிகளில் சுகமான வலி காதல் வலி .....
துளிகளில் சுகமான துளி கண்ணிர் துளி ....
காதலுக்கு பிடித்த துளி கண்ணிர் துளி ....
இதயத்துக்கு பிடித்த சுகமான வலி ....
காதல் வலி ...........arm
காதல் வலி இன் பரிசு கண்ணிர் துளி.

காதலர் தினம்

காதலிப்பவர்களுக்கு காதலர் தினம் உண்டு
காதலில் தோல்வி உற்றவர்களுக்கு
கண்ணீர் துளி உண்டு
காதலிப்பவர்கள் இதயத்தை பரிமாறிக்கொள்வர்கள் ...
காதலில் தோல்வி உற்றவர்கள்
...
மது அருந்திக்கொல்வர்கள் *********
**********************
காதலர் தினத்தில் காதலர்கள் உல்லாசமாக இருப்பார்கள்
ஆனால் தோல்வி........
உற்றவர்கள் அதை நினைத்து மனம் உடைந்து இருப்பார்கள்
காதலர் தினம் சிலருக்குத்தான்
பலருக்கு காதல் தோல்வி உற்றதினம் !!!!!!!!!!!!!!

உலகத்தில் காதலில் வெற்றி பெற்றவர்கள்>>>>> 30% ??

தோல்வி உற்றவர்கள்>>>>> 70% ???

அதில் அதிகமாக தோல்வி உற்றவர்கள்

ஆண்களா ?????

பெண்களா ?????
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
************************A.N.S,BOYS
See More

உன் நினைவு

சொந்தத்தில் வந்தது பாசம்
கற்பனையில் வந்தது கவிதை
சோகத்தில் வந்தது கண்ணீர்
தூக்கத்தில் வந்தது கனவு
தனிமையில் வந்தது உன் நினைவு

நீ!


மலர் என்று
நினைத்து

உன்னை
பறித்தேன்
...
நீயோ?

குத்தினாய்
முள்ளாக...

என்னை...!
 
 
நீ!

என்னை பிரியும்
நேரம்...

... நான்!

உன்னைவிட்டு பிரியும்
நேரமாக
இருக்க வேணும்
(மரணம்)

அம்மா .....


அம்மா .....
தரணியில் உயிர்களை படைத்தவன் பிரம்மா.....

அவனை நான் கண்ணடதில்லை.......

... தாய்மையோடு தன்னுடலில் என்னுயிரை தளிரசெய்தவள் என் அம்மா........

இவளைகண்டிருகிறேன் என்னுயிராய் கொண்டிருக்கிறேன்......

இப்போது புரிகிறது உயிரை படைப்பது பிரம்மா இல்லை நம் அம்மா.........

தாய் சொல் மிக்க மந்திர மில்லை
என் தாயை தவிர வேறு தெய்வமும் இல்லை.