புதன், 14 டிசம்பர், 2011
பைங்கிளி அவள் நினைவால் ...........
ஓடுகின்ற மேகங்களே
கொஞ்சம் நில்லுங்கள் -என்
ஒய்யாரி அவளிடத்தில்
சென்று சொல்லுங்கள்
நாடுகின்ற காதலினை
ஏற்கச் சொல்லுங்கள்
நாடுகின்ற காதலினை
ஏற்கச் சொல்லுங்கள் நான்
நாளும் படும் வதையை
நன்றே சொல்லுங்கள்
பாடுகின்ற பாவிஜெல்லாம்
அவளே இருக்கிறாள் என்
பைங்கிளி அவள் நினைவால்
நானும் இருக்கிறேன்
தேடுகின்ற சுகமெல்லாம்
அவளில் உள்ளது என்
தேகமும் அவளாலே
மெலிந்து செல்லுது
சிந்தஜெல்லாம்
அவள்தானே
நிறைந்திருக்கிறாள் -என்
சிங்காரி அவள் ஏனோ
எனை மறுக்கிறாள்
எனக்காக ஓடுகின்ற மேகங்களே
கொஞ்சம் நில்லுங்கள் .- என் ஒய்யாரி
அவளிடத்தில் சென்று சொல்லுங்கள் ...................??
சுனாமி ..........
அந்த ஒரு நொடிப்பொழுதில்
ஒரு பெரும் துயரம்
ஓ .............
அன்னை மடிஎனத் தவழ்ந்த அலைகடல்
தன பெரு வயிறு பிளந்து
எங்கள்
கடுவரையை கவர்ந்தது
வலை விரித்து
வாரிச் செல்வோம் மீனை -நீ
அலை விரித்து
அவகரித்தாய்
எம் வாழ்வினை
பழி சுமந்த பரம்பறையாய்
நாங்கள் இங்கே .............
பார்த்திருக்க பாலருடன்
பலரை இங்கு பறி கொடுத்தோம்
விதி எழுதி வைத்ததுவோ !
விடை அறியா புதிர் இதுவோ !!
படை நகர்த்தி கொலை புரிந்த
களம் எனவே கரைகள் எல்லாம் ............
அந்த ஒரு நொடிப் பொழுதில்
ஒரு பெரும் துயரம்! ஓ ................
சுனாமிஜின் நினைவால் ...................!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


