புதன், 25 ஜனவரி, 2012

சாதிக்கப்பிறந்தவன்

சாதிக்கப்பிறந்தவன் நானுங்க - இங்கு
சாகப்பிறந்தவன் நானில்லைங்க!
புத்தி சொல்லுவது எனக்கு புடிக்காதுங்க
சொந்தப்புத்தி எனக்கு ஏராளமுங்க!

எத்தனையொ ஏமாற்றங்கள்!
எத்தனையோ வேதனைகள்!
ஆயிரம் சித்ரவதைகள் இருந்தாலும்
அத்தனையும் முறியடிப்பேனுங்க

சின்ன சின்ன சுகங்கள் கூட
என் மனசுக்கு வாய்க்கலைங்க...
விருப்பு வெறுப்பு என்ற எதுவுமே
என் வாழ்க்கைக்கு இல்லைங்க...

கடலுக்குள் இருக்கும் உப்பாய்
உறைஞ்சு நிறைஞ்சிருப்பேனுங்க - ஆனால்
ஒரு போதும் காணாமல்
கரைஞ்சு போகமாட்டேனுங்க....

நினைச்சதை நடத்தும் நாள் வரை - என்
நெஞ்சத்து நெருப்பை அணைக்கமாட்டேனுங்க
பாறாங்கல்லான என் வாழ்வை - சிறு
பனித்துளியாய் மாற்றிச்செல்வேனுங்க..{

திங்கள், 23 ஜனவரி, 2012


நான் பிறக்கும் போது,
  தாயை தேர்ந்தெடுக்கவில்லை 
தந்தையை  தேர்ந்தெடுக்கவில்லை !!

நான் வளரும்போது , 
  நண்பர்களை தேர்ந்தேடுகவில்லை ....
என் உறவுகளை தேர்ந்தெடுக்கவில்லை !!

நான் விரும்பிய நீ -
   ஏனடி என்னை தேர்ந்தெடுக்கவில்லை ???!!!.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

உன் மனதை

தாயானாலும் தலை வலியை
   பகிர முடியாது .....
நீ என் உயிராக இருந்த போதும்
   உன் மனதை என்னால் புரிந்து கொள்ள
  முடியவில்லை ......

மெட்டிச் சத்தம்




பெண்ணே உன்    மெட்டிச் சத்தம்
என் நெஞ்சைத் தட்டியது .!! 
அது நான்  அணிவித்தது அல்ல
         இன்னொருவன் உன்னக்கு
 அணிவித்தது என்றபோது
   என் மனம் பச்சை குழந்தை போல ,,,
      வாய் விட்டுப் அழுகிறது .......!!

இடம் இல்லை

உன் கூந்தல் இவ்வளவு பெரிதாக இருக்கின்றது ,
    அவதானித்த நான் ,,,,,
 இவ்வளவு சிறிய உன் மனதை
       அவதானிக்க மறந்ததென்ன??
         
அதி எனக்கு இடம் இல்லை என்பதையும் ,,
    நினைக்க மறந்து விட்டேன் ........??!!

உன்னை மட்டும்தான்



நீ திரும்பிப் பார்க்கும் போது,-நீ
   என்னை பார்கவில்லை என்பது எனக்கு
     தெரியும் ......
ஆனால் உன் நண்பியை பார்ப்பது போல ,,
       நீ என்னைத்தான் பார்கிறாய் என்ன்பது
          எனக்கு தெளிவாக தெரியும் !!!
ஆனால் நான் பார்ப்பது
                                             உன்னை மட்டும்தான் என்பது
                             உனக்கு மட்டும் தெரியும்..........!!...??

அற்பமாக நினைத்தாய்??

அற்புதமான பெண்னே-நீ
    ஏனடி என்னை அற்பமாக நினைத்தாய்??
        நான் அற்பமாக இருந்தாலும் -என்
            மனதில் உன்னை அற்புதமாகத்தான் , வைத்திருக்கின்றேன் ......!!

என் விழிகளில்

என் விழிகளில் ,  நீரோட
                                                  நீ ஓடிப் போனதென்ன ??
உன்னை நினைத்து நான் அழ
                                                   நீ எனை நினைக்க மறுத்ததென்ன??
உன் நினைவால்  நான் துடிக்க
                                                        நீ இன்னொருவனை மணந்த மாயம் என்ன??



கொடுத்துவிடு

என் மனமெல்லாம் உன் நினைவுகள்தான் ,,!
  என் விழியெல்லாம் உன் கனவுகள் ,,,!
      உனக்காக என்னையே தந்துவிட்டேன் .......?
இனி என்ன இருக்கிறது
                                        உனக்காக நான் தர ??
உன்னிடம் ஒன்று இருக்கிறது நீ எனக்காக தர -
        அது உன் இதயம் தானடி !!!
  கொடுத்துவிடு ........
                     இல்லை
                                    என்னை கொன்றுவிடு !!!    

மௌனமாகிறேன் ...

நான் உன்னை நினைக்கும் போதெல்லாம் ,,
   மௌனமாகி விடுகின்றேன் ..........!!

  ஏன் என்றால் உனக்கு அமைதிதான் ,,
        மிகப் பிடிக்கும்......!!

உனக்கு பிடித்தவற்றை மட்டும் நான் செய்கின்றேன் ,,
    உன்னை எனக்கு பிடித்திருந்ததனால் .........??

திங்கள், 2 ஜனவரி, 2012

வெற்றி பெறலாம்

கஸ்டமான வேலையையும் ,
   இஷ்டப்பட்டு செய்வோமானால்
       நிச்சயம்  வாழ்வில்  வெற்றி பெறலாம் .........!!