வெள்ளி, 16 டிசம்பர், 2011

facebook காதல்..!!!??


என் கை எழுதை
பார்க்க துடிக்கும்  அன்பே 
முதலில் நீ 
பிறந்திருக்க கூடாதா   
உன்னை
முழுமனதாய் 
ஏற்றிருப்பேனே !!

பாராமலே என்மீது
பாசத்தை
வைத்த நீயும்
எட்டாத் தூரத்தில்
இருக்குறாய்  !!

நான் உன்னை
அடைவது எப்படி ??
உன் இருப்பிடம்
 வந்து விட்டால்
தேடுதல் வேட்டை
என் கண்கள்
தொடங்கிவிடும்
கானக்கிடைக்காததால் 
உள்ளம் சோர்ந்து விடும்
இத்தனைக்கும்
உன்னை நான்
பார்த்ததில்லை
எப்படி நீ இருப்பாய்.....??

சாதனை மனிதன் நீ !!

சொந்த மனத்தின் வைராக்கியத்தை 
வளர்த்து விட  மனிதனே ,
உன்னை ஊர்  போற்ற வேண்டும் !
உன் வேதனை எனக்கு சோதனை 
உன் வேதனைகளை சோதனைகளை 
சாதனையாக மாற்றிவிடு !!
சாதனை உன்னை வாழவைக்கும் 
அப்போது உன் சக்தி  உனக்கு புரியும் 
வாழ்வின் பொறுமை அது கொடுமை இல்லை என்று,,,
அப்போது நீ அறிவாய்
உன்னுடைய கலக்கம் கூட  அப்போது சிறு 
மயக்கம்தான்   என்று உணர்ந்து  கொள்வாய் !

          இனியும் வேண்டாம் , கலக்கம் ..
வாழ்க்கை ஒரு நீர்க் குமிழிதான் 
அதிலும் வாழும் வாழ்க்கை  சில காலம் தான் ........

        அதுவரை மனிதனே :
                  எந்தவித சன்சலமும் இன்றி 
                   இன்பமாய்  வாழ்ந்திடுவோம்..................!!     

சந்திப்பு ???

சந்தித்த பொது-சிந்திக்கவில்லை 
சிந்தித்தபோது - உன் ஞாபகங்களை மறக்க முடியவில்லை ..........?? 

வசந்தத்தின் வழி.......??

நினைத்தவை எல்லாம் - கிடைப்பதில்லை
நின்மதியற்ற வாழ்வில்
                             நிணல் போன்றே
நிஜமும் இறந்து விட்டது
 நீ கிடைத்ததனை நினைத்து .
வாழ்வை வசந்தப்படுத்தும்
அதுவே உன் வசந்த காலத்திற்கு
                வழியாகும்........

காத்திருக்கிறேன்.......

என் வாசல் வழியாக 
நீ வீட்டிக்கு வருவாய் என 
காத்துக்கொண்டு  இருக்கிறேன் 
சொல்லிவிடு நீ எப்போது    வருவாய்............?? 

புகையை விழுங்கும் புகை ........

அம்மா இவள்
விளிக்கும் விடியல்கள்
அடுப்பு புகைக்குள்
முக்குளிக்கும் கருவி
அப்பம் சுட்டு விற்ற பணம்
பிள்ளையின் படிப்புக்காய்
அள்ளிக்கொடுக்க
தேநீர் கடையிலும்
தெருச் சந்தியிலும்
குந்தியிருக்கும்
பிள்ளை வாயில்
வேல்லைச் சுருட்டாகி 
புகைகிறது ..........!!!!!...........?? 

பிரிவின் துயரம்........

உயிரான நட்பே
உருக்குலைந்த போதும்
உண்மையான நான்
உன்னை நேசித்தால்
உன்னை நினைத்து
உன்னோடு பழகிய நாட்களை
உறவாகி வாழ்ந்து வருகிறேன் .......

தாய்மை......

உன் உதிரத்தை
எனக்காகக்
கருவாக்கினாய்
என்
 உயிர்ப்பிலும்
உணர்விலும்
உன் தாய்மையை
எனதாக்கினாய்
பிரபஞ்சமே........... நீயே ..........